சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி? https://ift.tt/gB56PLx

மும்பை: நடிகர் சயிப் அலி கானை கத்தி​யால் குத்​தி​யவரை போலீ​ஸார் கைது செய்​துள்ளனர்.

பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் (54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வருகிறார். 11-வது தளத்​தில் உள்ள அவரது வீட்​டில் கடந்த புதன்​கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்​து கத்தி​யால் 6 முறை நடிகர் சயிப் அலி கானை குத்​தினார். இதையடுத்து மும்பை லீலாவதி மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்​றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலை​யில் அவர் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் (ஐசியு) வைக்​கப்​பட்​டிருந்​தார். அபாய கட்டத்​தைத் தாண்டிய நிலை​யில் நேற்று, அவர் ஐசியு பிரி​விலிருந்து மாற்​றப்​பட்​டுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post